×

திருப்புத்தூர் அருகே அம்மன் கோயிலில் பால்குட விழா

திருப்புத்தூர், மே 15: திருப்புத்தூர் அருகே, கொல்லாம்பட்டி ஸ்ரீமுத்துநாச்சி அம்மன் கோயிலில், சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பால் குடவிழா நேற்று நடைபெற்றது. திருப்புத்தூர் அருகே, கொல்லாம்பட்டி கிராமத்தில் புண்ணிய விருத்தி மரத்தின் கீழ் ஸ்ரீமுத்துநாச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மே 7ம் தேதி காப்பு கட்டப்பட்டு விழா தொடங்கியது. இதனையொட்டி கிராமத்தினர் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று காலையில் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகம், பால்குடம் எடுத்து, ஸ்ரீமுத்துநாச்சி அம்மன் கோயிலுக்கு வந்தனர்.

பின்னர் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் இறங்கினர். பின்னர் பகதர்கள் எடுத்து வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது. பின்னர் கிராமத்தினர் அம்மனுக்கு கொண்டு வந்த பட்டு மற்றும் மாலைகள் அணிவித்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாம் வழங்கப்பட்டது.

Tags : Festival ceremony ,Amman Temple ,Tiruputhur ,
× RELATED விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில்...