×

சிவகங்கை அழகப்பா பல்கலையில் மாலை நேர கல்லூரியில் மாணவர் சேர்க்கை3

சிவகங்கை, மே 15:  சிவகங்கை அழகப்பா பல்கலைக்கழக மாலை நேர கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் நகர் அரசு மேனிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 3 கல்வியாண்டுகளாக அழகப்பா பல்கலைக்கழகத்தின் மாலை நேர கல்லூரி நடந்து வருகிறது. இக்கல்லூரியில் இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது.

சிவகங்கையில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக மாலை நேர கல்லூரியில் படிக்கும் பட்டப்படிப்பு, அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் இப்பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் பிற கல்லூரிகளில் படிக்கும் பட்டப்படிப்பிற்கு சமமானதாகும். இக்கல்லூரியில் இந்த கல்வியாண்டில் பி.ஏ (தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி கணிதம், கணினி அறிவியல்), பி.காம், பி.பி.ஏ உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்ப கட்டணம் ரூ.50. இங்கு மாலை 4.45 மணிக்கு வகுப்புகள் தொடங்குகின்றன. கூடுதல் விபரங்களுக்கு 73735 38777என்ற செல் எண் மற்றும் மாலை 4.45 மணிக்கு மேல் கல்லூரியில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : evening college ,Sivagangai Alice University ,
× RELATED மாலை நேர கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்க கோரிக்கை