×

தெருவில் செல்வோரை கடிப்பதால் நாய்கள் வளர்க்க கட்டுப்பாடு வருமா?

ராமநாதபுரம், மே 15: ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 250க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நகர் புறத்தை இணைக்கும் வகையில் 4 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. அனைத்து சாலைகள் வழியாக தெருக்களுக்கு இணைப்புச்சாலை உள்ளது. பல தெருக்கள் சந்துகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. காலை நேரத்தில் நெடுஞ்சாலையில் கடை தெருப் பகுதியில் உள்ள டீக்கடை, ஹோட்டல்களில் கொட்டப்படும் கழிவுகளை தின்பதற்காக சுற்றி திரியும் நாய்கள் அதிகமாகி வாகனங்கள் வந்து செல்ல துவங்கியவுடன் தெரு பகுதிக்கு ஒடி வந்து விடுகின்றன.
 
கோடை விடுமுறை என்பதால் பள்ளி விடுமுறை காலத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை கடித்து குதறி விடுகிறது. இதனால் குழந்தைகளை தெருவில்  விளையாட முடியவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். பகல் நேரங்களில் வெயில் அதிகமாக உள்ளதால் தெருவில் திரியும் நாய்களுக்கு வெறி பிடித்து விடுவதால் ஒரே  நேரத்தில் பலரையும் துரத்தி துரத்தி கடிப்பதாக கூறுகின்றனர்.
 
கோடை காலத்தில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு தடுப்பூசி போட்டு உடல் சூடாகாமல் வளர்த்து வரவேண்டும். பராமரிப்பில்லாமல் தெருவில் திரியும் நாய்களை யாரும் கண்டு கொள்வதில்லை. ராமநாதபுரம் நகராட்சி சுகாதாரத் துறையினர் நகரில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் கோடை விடுமுறையை அமைதியான முறையில் விளையாடி மகிழ தெரு நாய்களிடமிருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : street ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...