×

திருப்பரங்குன்றம் 3 ஆண்டில் 2 இடைத்தேர்தல் அன்றும், இன்றும் என்ன வித்தியாசங்கள்?

மதுரை, மே 15: மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் 2016 மே மாத பொதுத் தேர்தலுக்கு பிறகு நவம்பரில் இடைத்ேதர்தல் நடைபெற்று, இரண்டரை ஆண்டு இடைவெளியில் மீண்டும் 2019 இடைத் தேர்தல் நடக்கிறது. இந்த இரு தேர்தலிலும் ஏற்பட்டுள்ள வித்தியாசங்கள் விவரம் வருமாறு:-
* 2016 இடைத் தேர்தல்- அன்று    * 2019 இடைத்தேர்தல்- இன்று
* காரணம்: 2016 மே மாதம்
  பொதுத் தேர்தலில்
   ஜெயித்த சீனிவேல் மரணம்.
* தேர்தல் தேதி: நவ.19
* மொத்த வாக்காளர்: 2,85,980
* மொத்த வாக்கு சாவடி: 291
* மொத்த வேட்பாளர்: 28
* போட்டியிடும் கட்சிகள்-
  திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி
* பாஜ, தேமுதிக போட்டி
* நடிகர் கமலஹாசன் கட்சி ஆரம்பிக்கவில்லை
* திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன்
* அதிமுக ஒன்றாக இருந்தது
* அதிமுக வாக்கு ஒன்றுபட்டு இருந்தது
*  அதிமுக 9 அமைச்சர்கள் முகாம்
* ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது அறிவிப்பால் பரபரப்பு
* அதிமுக மீது பணப்பட்டுவாடா புகார்.
* அதிமுக மெஜாரிட்டி ஆட்சி
* ஆட்சியை நிர்ணயிக்காத இடைத்தேர்தல்
* தமிழகம் முழுக்க எதிர்பார்ப்பு இல்லை.
* காரணம்: போஸ் மரணம்
   மட்டுமின்றி அவர் ஜெயித்தது செல்லாது     
  என தீர்ப்பு
* தேர்தல் தேதி: மே 19
* மொத்த வாக்காளர்கள்: 3,04,478
* வாக்கு சாவடி: 297
* வேட்பாளர்: 37
* திமுக, அதிமுக, அ.ம.மு.க.
  இடையே மும்முனை போட்டி
* இல்லை
* கமலஹாசனின் ம.நீ.ம. போட்டி
* அதே டாக்டர் சரவணன் போட்டி
* அதிமுக இரண்டாக உடைந்தது
* இரண்டாக பிரிகிறது
*  அதிமுக 8 அமைச்சர்கள் முகாம்
* புது ரூ.500 நோட்டு, ரூ.2 ஆயிரம் நோட்டு வந்தது. 1000 ரூபாய் நோட்டு இல்லை.
* அதிமுக மீது அதே பணப்பட்டுவாடா புகார்
* அதிமுக மைனாரிட்டி ஆட்சி
* ஆட்சியை நிர்ணயிக்கும் இடைத்தேர்தல்
* தமிழகம் முழுக்க எதிர்பார்ப்பு.

அதிமுக ‘டாடி’ எம்ஜிஆரா, மோடியா?
திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேற்று மாலை பஸ் ஸ்டாண்ட் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘‘சசிகாலா காலில் விழுந்து தவழ்ந்து ஆட்சியை பிடித்த எடப்பாடி அந்த சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பியவர். இந்த எடப்பாடி போன்றோரை வெளியேற்றக்கூடிய தேர்தல்தான் இந்த இடைத்தேர்தல். ஓபிஎஸ் உடன் இருந்த முத்துராமலிங்கம்கூட தற்போது அவருடன் இல்லை. கூலிக்கு ஆட்கள் கூட்டி வந்து கூட்டம் சேர்த்து கட்சியை வளர்க்கின்றனர்.

அதிமுகவில் தைரியமான தலைவர் இல்லை. அதிமுகவிற்கு ‘டாடி’ எம்ஜிஆர் தான். ஆனால் ஒரு அமைச்சர் கூறுகின்றார் மோடிதான் எங்கள் ‘டாடி’ என்று. ஆட்சியை காப்பாற்றுவதற்காக பாஜக.வை பார்த்தால் அதிமுகவினர் கைகட்டி நிற்கின்றனர். எடப்பாடிதான் ஒரே தலைவர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகிறார். தற்போது ஓபிஎஸ்சை ஓரம் கட்டிவிட்டனர். மேலும் அதிமுக கட்சி தென் மாவட்டத்தில் தற்போது ஓபிஎஸ், ராஜன்செல்லப்பா உள்ளிட்ட குடும்பங்களின் கையில்தான் உள்ளது. அதிமுக தொண்டர்கள் எந்த வளர்ச்சியும் இன்றி உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதி வளர்ச்சி பெற வருகின்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்’’ என்றார்.

ராஜகண்ணப்பன் கேள்வி பிளைட் லேட் ஆயிடுச்சு... அதான் நானும் லேட்டு...
நடிகர் கார்த்திக் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது கூட்டங்களுக்கு தாமதமாக செல்வது, புழுக்கம் தாங்காமல் ஏர்கூலர் அருகில் சென்று நிற்பது என்று ஏகப்பட்ட அட்ராசிட்டிகளை செய்து, அதிமுக தொண்டர்களை மண்டை காய வைத்தார். தற்போது 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்களுக்கு வெற்றிக்கனியை பறித்துக்கொடுக்க நவரசநாயகன் களமிறங்கியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து நேற்று மாலை நடிகர் கார்த்திக் பேசுவதாக அறிவித்திருந்தனர். அவர் மாலை 6 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் வழக்கம்போல் தாமதமாக அவர் 8 மணிக்குதான் திருப்பரங்குன்றம் வந்தார். பின்னர் கூடல்மலை தெருவில் திறந்தவேனில் நின்றபடி பேசிய அவர், ‘‘அதிமுக நல்ல இயக்கம். முழு திருப்தியுடன் நான் இந்த கூட்டணியில் உள்ளேன். விமானம் தாமதமாக வந்ததால் நான் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தேன்’’ என்றார்.

ஐந்து நிமிடம் மட்டுமே பிரச்சார வாகனத்தில் ஏறி பிரச்சாரம் செய்த அவர், பின்னர் திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி காருக்குள் சென்றுவிட்டார். விசாரித்தபோது, ‘‘நவரசநாயகன் ஏசி.யிலேயே இருந்து பழக்கப்பட்டவர். காற்று அடிக்காததால் காருக்குள் சென்றுவிட்டார்’’ என்று தெரிவித்தனர். ஏற்கனவே தாமதமாக வந்தது இல்லாமல், இப்படி காருக்குள் போய் உட்கார்ந்து கொண்டாரே என்று அதிமுக.வினர் நொந்துகொண்டனர்.

‘வைரத்த கொடுத்தாலும் ஜெயிக்க முடியாதுங்க’
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அமைச்சர் ஜெயக்குமார் விளாச்சேரியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அமமுகவினரால் கொள்ளையடிக்கப்பட்ட வைரங்கள் அனைத்தையும் திருப்பரங்குன்றத்தில் செலவு செய்தாலும் அம்மாவின் கோட்டையாக விளங்கும் திருப்பரங்குன்றம் தொகுதியை எவராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. எங்களுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மதங்கள் தொடர்புடைய பிரச்சாரம் கண்டிக்கத்தக்கது. அதிலும் ஒரு மதத்தின் மீது கமல்ஹாசன் தாக்கி பேசிய கருத்து தவறானது.

அவர் மீது வழக்கு தொடர வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு உட்பட்ட சட்டத்தின் அடிப்படையில் கமல்ஹாசன் பேச்சு எதிரானதாக இருந்தால் அவர் மீது நிச்சயமாக வழக்கு தொடுக்க வாய்ப்பிருக்கும். தேர்தல் நடைமுறை அமலில் உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தான் வழக்கு பதிய வேண்டும். மேலும் கொள்கை மற்றும் லட்சியங்கள் மற்றும் மக்களுக்கு செய்யக் கூடிய நலதிட்டங்கள் ஆகியவற்றை வைத்து பிரச்சாரம் செய்வது தான் நல்லது. வேறுவிதமாக ஜாதி மற்றும் மதம் போன்றவற்றை அவதூறாக பேசி பிரச்சாரத்தில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. தற்போது லட்சத்திலிருந்து கோடியை அதிமுக தொண்டர்கள் பெற்றுள்ளனர். இதுவே அதிமுகவின் வளர்ச்சி’’ என தெரிவித்தார்.

நவரசநாயகன் சமாளிப்பு -அமமுக.விற்கு ஜெயக்குமார் சவால் போலீஸ் எஸ்கார்டுடன் வலம் வரும் சுயேட்சை
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லப்பாண்டி திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் தேர்தல் முடியும் வரையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.'

வேட்பாளர் செல்லப்பாண்டி கூறுகையில், ‘‘நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் அரவக்குறிச்சியில் பரப்புரையின் போது திமுக தலைவர் ஸ்டாலினை தாக்குறைவாக விமர்சனம் செய்து, என்னுடன் விவாதிக்க தயாரா என்று அழைப்பு விடுத்து இருந்தார். தமிழகத்தில் உள்ள எளிய மக்கள் நலம் பெற வேண்டும் என்று அண்ணாவால் உருவாக்கப்பட்ட மாபெரும் கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான ஸ்டாலினை இவ்வாறு தரம் தாழ்ந்து தேர்தல் பரப்புரையில் பேசியது தவறானது.

இந்த வழக்கமானது தொடர்ந்து சீமானை பின்பற்றும் இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் தரப்பிலிருந்தும் எதிரொலிக்கக் கூடும் என்ற அச்சத்தில் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையில் புகார் அளித்திருந்தேன். அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொலைபேசியில் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே இது குறித்து மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் முறையிட்டேன். இதன் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.  தேர்தல் முடியும் வரையில் எனது பிரச்சார பயணத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்க மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம் உத்தரவிட்டுள்ளார்’’ என்றார்.

பழச மறந்துட்டியா கண்ணு...?
திருப்பரங்குன்றம் தொகுதி அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து நடிகர் செந்தில், நடிகை சிஆர்.சரஸ்வதி ஆகியோர் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் செய்தனர். அப்போது பேசிய சிஆர்.சரஸ்வதி, ‘‘தற்போது அதிமுகவிற்கு வாக்கு கேட்கும் விந்தியா ஒரு காலத்தில் மோடியா லேடியா என கூறியதை மறந்து தற்போது பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவிற்கு  பெட்டி வாங்கிக் கொண்டு வாக்கு கேட்டு வருகின்றார்.  அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் பணம், பதவி அதிகாரத்திற்காக ஜெயலலிதாவையும் அவரின் கொள்கையையும் மறந்து விட்டார்கள். துரோகத்தின் பக்கம் இருப்பதைவிட தர்மத்தின் பக்கம் இருப்பதே மேல்’’ என்றார்.

நடிகர் செந்தில் பேசுகையில், ‘‘மக்களை சுரண்டி சுரண்டி கொள்ளையடித்த பணத்தை வாக்குக்காக மக்களிடம் கொடுக்கின்றனர். அதிமுகவினர் அனைவரும் குடித்துவிட்டு பேசுகின்றனர்.  ஓபிஎஸ் நடத்தியது தர்மயுத்தம் இல்லை. கர்மயுத்தம் என கூறுகின்றனர். மறுபடியும் அம்மா ஆட்சி அமைய மகேந்திரனுக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.

எவனென்று நினைத்தாய்...எதை கண்டு சிரித்தாய்...
திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து  தோப்பூரில் நேற்று மாலை நடிகை கோவை சரளா வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ‘‘புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழி வந்தவர் தான் கமலஹாசன். கமலஹாசனை பார்த்து சிலர் இவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என நக்கல் நையாண்டி  செய்கின்றனர். கமலஹாசன் வரலாறு, புவியியல், அறிவியல் அனைத்தும் அறிந்து தனக்கு தகுதி உள்ளதா என பார்த்துதான் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார். கமலஹாசனை பார்த்து உங்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என கேட்பவர்கள் அனைவரும் பிறக்கும் போது அரசியல் கட்சி துண்டை போர்த்தி கொண்டா பிறந்தார்கள்?’’ என்றார்.

கோவை சரளா ‘பளார்’ விந்தியாவை கேட்கும் சரஸ்வதி சரவணனுக்கு தங்கபாலு வாக்குசேகரிப்பு கட்சிய கலைச்சுபுட்டு சினிமாக்கே போயிடுப்பு
கமலிடம் செல்லூரார் கறார்'

திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கமலஹாசனுக்கு  அரசியலின் அடிச்சுவடியே தெரியாது. அவருக்கு அரசியல் ஒத்து வராது. கமலஹாசன் ஒரு நல்ல கலைஞன். தமிழகத்தில் கமலஹாசன் அரசியலுக்கு வந்ததிலிருந்து அவர் பேசியது யாருக்கும் எதுவும் புரியவில்லை. இப்போது இந்துக்கள் குறித்து அவர் பேசிய கருத்திலிருந்து அரசியலில் மிகப் பெரிய எதிர்ப்பை சம்பாதித்து விட்டார். என்னை  பொறுத்தவரையில் மக்கள் மய்யம் என்ற பெயரே சரியில்லை. ஆகவே கமலஹாசன் அவரின் கட்சியை கலைத்து விட்டு செல்லலாம். கமல் மீண்டும் கலைத்துறையில் ஈடுபட வேண்டும் என்பதே எனது எண்ணம்’’ என்று தெரிவித்தார்.

Tags : midterm elections ,Thiruparankundram 3 ,
× RELATED ஆந்திர சட்டமன்ற இடைத்தேர்தலில் போலி...