×

வரத்து குறைவு எதிரொலி: பட்டாணி விலை உயர்வு

மதுரை, மே 15:  வரத்து குறைவு எதிரொலி மற்றும் நாளை முகூர்த்தம் உள்ளிட்ட தொடர் விஷேச தினங்கள் வருவதால் மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறிகள் மார்க்கெட்டில் பச்சை பட்டாணி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறிகள் மார்க்கெட்டிற்கு கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து பட்டர்பீன்ஸ், சோயா பீன்ஸ், பச்சைபட்டாணி உள்ளிட்ட காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது.

இங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த முகூர்த்த தினங்கள் வருவதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் விலை உயர்ந்து விற்பனையாகிறது. கடந்த இருவாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.50க்கு விற்பனையான பட்டாணி நேற்று கிலோ ரூ.150க்கு விற்பனையானது. சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் கூறும்போது, ‘‘மே 16ல் துவங்கி அடுத்தடுத்த முகூர்த்த தினங்கள் வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக பட்டர்பீன்ஸ், சோயா பீன்ஸ், பட்டாணி உள்ளிட்ட மலைக்காய்கறிகளின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது” என்றார்.

Tags :
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு