சென்னை வாலிபரின் 11 பவுன் மதுரை லாட்ஜில் திருட்டு

மதுரை, மே 15: சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த நீராஜ் ஜெயக்குமார்(27). இவர் மதுரை டிபி ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 10ம் தேதி குடும்பத்துடன் தங்கினார். மறுநாள் காலை அறையை காலி செய்துவிட்டு, ெகாடைக்கானல் சென்றுவிட்டார். அங்கு சென்று பார்த்த போது, பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகளை காணவில்லை. அங்கு தேடிப்பார்த்துவிட்டு கிடைக்காததால், மதுரையில் தான் தங்கியிருந்த லாட்ஜூக்கு வந்தார். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்த போது, கண்டறிய முடியவில்லை.  இதனையடுத்து பையிலிருந்த நகைகள், லாட்ஜில் மாயமான சம்பவம் குறித்து  எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார்.

Tags : Madras Lodges ,Chennai ,
× RELATED சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி