பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, மே 15:  பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசிக்கில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 57 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். தங்களின் பிள்ளைகளை கல்லூரி, பள்ளிகளில் சேர்ப்பதற்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். எனவே, இவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தில் 5 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று (15ம் தேதி) காலை 9 மணி முதல் 11 மணி வரை பாசிக் தலைமை அலுவலகம் முன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.

× RELATED பிடிஆர் சிலைக்கு மாலை வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்