×

சிதம்பரம் காசுக்கடை தெருவில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு

சிதம்பரம், மே 15: சிதம்பரம் வணிக பகுதியான மேலவீதியை அடுத்துள்ளது காசுக்கடை தெரு. இத்தெருவில் வங்கி, ஏராளமான நகை கடைகள், மளிகை கடைகளும் உள்ளன. குறுகிய தெருவான இந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த தெரு வழியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிப்பதில்லை. அதற்காகவே தெரு முனையில் காணி கல் ஒன்று நடப்பட்டிருந்தது. தற்போது அந்த கல் அகற்றப்பட்டு போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில் ஆட்டோ, வேன்கள், லாரிகள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.மேலும் தற்போது காசுக்கடை தெருவில் புதியதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. சாலை மேடாக போடப்பட்டதால் கடைக்காரர்கள் தங்கள் கடைக்கு முன்பு சிமெண்ட் தரை மேடாக அமைத்து சாலையுடன் இணைத்து விட்டனர். அங்கு வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் மக்கள் சாலையில் நடமாடும் நிலை உள்ளது.இந்நிலையில் ஆட்டோக்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் போது மக்கள் நடக்க கூட முடியாமல் அவதியுறுகின்றனர். அப்பகுதியில் லோடு இறக்குவதற்காக முக்கியமான நேரங்களில் லாரியை நிறுத்தி விடுகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் அவதியுறுகின்றனர். ஆகையால் முன்பு போல் காசுக்கடைத் தெருவில் இருசக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், நகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்து சாலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : shoppers ,Chidambaram Cash Shop Street ,
× RELATED உ.பி.யில் வாடிக்கையாளர்களை அழைப்பதில்...