×

சிவகிரி, ராயகிரியில் இன்று மின்தடை

சிவகிரி, மே 15:  சிவகிரி, ராயகிரி பகுதிகளில் இன்று (15ம்தேதி) மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து கடையநல்லூர் மின்கோட்ட செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விஸ்வநாதப்பேரி துணை மின் நிலையத்தில்  மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (15ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி சிவகிரி, தேவிபட்டினம், விஸ்வநாதப்பேரி  தெற்குச்சத்திரம், வடக்குச்சத்திரம், மேலக்ரிசல்குளம், வழிவழிக்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, மற்றும் வடுகபட்டி பகுதிகளில்   காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



Tags : Sivagiri ,residents ,Raigarh ,
× RELATED காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்