×

சிவகிரி பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு

சிவகிரி, மே 15:  சிவகிரி  பாலவிநாயகா உயர்நிலைப் பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நடந்தது. சிவகிரியில் செயல்படும் பழமையான பாலவிநாயகா உயர் நிலைப்பள்ளியில் 1990-91ம் ஆண்டில் 10வது வகுப்பு பயின்ற பழைய மாணவர்கள் சந்திப்பு நடந்தது. பள்ளி நிர்வாகி டாக்டர் சுந்தரம் தலைமை வகித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர் வள்ளிமயில் சுந்தரம், தலைமை ஆசிரியர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். பழைய மாணவர் ஹோசிமின் வரவேற்றார். பழைய தலைமை ஆசிரியர்கள் சேதுராமன், சேதுராமலிங்கம், பரமசிவம், முன்னாள் ஆசிரியர்கள் காளியப்பன், சேவுகப்பாண்டியன், தவமணி, செண்பகம், சீனி, சலோமி, லீலாவதி, பணியாளர்கள் சேதுபாலசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், காந்தி, ராமலிங்கம், திருவாலியமுத்து, காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பழைய மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடியதோடு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இதையொட்டி பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்விக் கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர்கள் கனகசங்கரபாண்டியன், சக்திவேல், சதாசிவம், ராமராஜ், குமார் சிவகாமி, சுப்புலட்சுமி,  அங்காள ஈஸ்வரி, சாந்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



Tags : Sivagiri School ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி