×

வேன் மோதி பாதயாத்திரை பக்தர் பலி

ஓட்டப்பிடாரம், மே 15: எப்போதும் வென்றான் அருகே வேன் மோதிய விபத்தில் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் பலியானார். மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த 20 பக்தர்கள், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரை வந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் இவர்கள் எப்போதும் வென்றான் பாலத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து திருச்செந்தூர் சென்ற வேன், அரசு (55) என்ற பக்தர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Van Moti Padayasam Bhakta Kali ,
× RELATED முள்ளக்காடு பகுதியில் மீனவரை தாக்கிய இருவர் கைது