×

சமுதாய கூடத்தை முறையாக பராமரிக்க வில்லை

சாயல்குடி, மே 15: சாயல்குடி பேரூராட்சி சமுதாய கூடத்தை மராமத்து செய்யும் பணி முறையாக நடக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பேருந்துநிலையம் அருகே சமுதாய கூடம் உள்ளது. கடந்த 2008ல் அனைத்து பேரூராட்சிகளில் கட்டப்பட்டது. இந்த சமுதாய கூடத்தை திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிக்கும், அரசியல் கூட்டம், அரசு விழா போன்றவை நடந்து வருகிறது. இதனால் பெரும்பாலும் பயன்பாட்டிலேயே உள்ளது. கட்டிடம் கட்டப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாகி விட்டதால் கட்டிடம் சேதமடைந்து வருகிறது. இதனால் ரூ.3 லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் மராமத்து செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கட்டிடத்தில் சேதமடைந்த பகுதிகள், மேற்பூச்சுகள், கதவுகளை சீரமைக்காமல் வெறும் வண்ணம் மட்டும் பூசுவதாக புகார் எழுந்துள்ளது.

சாயல்குடி அண்ணாநகர் கிராமமக்கள் கூறும்போது, சாயல்குடி பேருந்து நிலையத்திலுள்ள சமுதாய கூடத்தை சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். திருச்செந்து£ர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களும் தங்கி ஓய்வெடுத்து செல்கின்றனர். இக்கட்டிடம் சேதமடைந்து கிடக்கிறது. அதனை மறைத்து வெறும் வண்ணம் மட்டும் பூசியுள்ளனர். கழிவறை, தண்ணீர் வசதியில்லை. போதிய மின் விசிறி, மின் விளக்குகள் இல்லை. தரைத்தளத்தில் போடப்பட்டுள்ள டைல்ஸ்கள் பழுதடைந்து விட்டது. மழை காலங்களில் கட்டிடத்தில் தண்ணீர் ஒழுகுகிறது. எனவே கட்டிடத்தை முறையாக மராமத்து செய்து பராமரிக்க வேண்டும் என்றனர்.

Tags : community hall ,
× RELATED தேர்தல் பணி போலீசார் தபால் ஓட்டு போட்டனர்