×

வையம்பட்டி அருகே ஆம்னி பஸ் மரத்தில் மோதி 36 பயணிகள் காயம்

மணப்பாறை, மே 15:  தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர். நள்ளிரவு 11.30 மணியளவில் பஸ் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே தங்கம்மாபட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர்மீடியனில் ஏறி, அடுத்த ரோட்டுக்கு சென்று அங்கு பள்ளத்தில் இறங்கி ஒரு தென்னை மரத்தில் மோதி நின்றது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் 35 பேர் மற்றும் டிரைவர் என 36 பேர் காயமடைந்தனர். பஸ் அடுத்த ரோட்டுக்கு சென்ற சமயத்தில் அந்த ரோட்டில் ஏதாவது வாகனம் வந்திருந்தால், பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என கூறப்படுகிறது.

காயமடைந்த அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு லேசான காயமடைந்த 20 பேர் மட்டும் முதலுதவி சிகிச்சை பெற்றவுடன், மாற்று பஸ்சில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். டிரைவர் கண் அயர்ந்ததே இந்த விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : passengers ,Omni ,Vayampatti ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!