×

திருச்சி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு 65 வார்டுகளில் 765 மையங்கள் இடம் பெற்றன

திருச்சி, மே 15:  திருச்சி மாநகராட்சியில் இறுதி வாக்குச்சாவடி மையங்கள் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக மாநகராட்சி ஆணையர் நேற்று வெளியிட்டார். இதில் 65 வார்டுகளில் 765 வாக்குச்சாவடி மையங்கள் இடம் பெற்றிருக்கிறது.
 திருச்சி மாநகராட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான மறுவரை செய்யப்பட்ட வார்டுகளுக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று வெளியிட்டார். இதில் திருச்சி மாநகராட்சி வார்டு எண்.1 முதல் 65 வரை மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளில் மொத்தம் 765 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் வாக்காளர்கள் மொத்்தம் 7,37,517 உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3,58,758, பெண் வாக்காளர்கள் 3,78,678, திருநங்கைகள் 81 வாக்காளர்கள் உள்ளனர்.


 ஏற்கனவே மார்ச் மாதம் வரைவு வாக்குச்சாவடி பட்டியில் வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 795 வாக்குச்சாவடிகள் இடம் பெற்றிருந்தது. அதேபோல் வாக்காளர் எண்ணிக்கையும் 7,38,043 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்குச்சாவடி பட்டியலில் வரைவாக்குச்சாவடி பட்டியலில் இருந்த எண்ணக்கையைவிட 30 வாக்குச்சாவடிகள் குறைந்துள்ளது. அதே போல் வாக்காளர் எண்ணிக்கையும் 526 குறைந்துள்ளது. ஏற்கனவே வாக்குச்சாவடிகள் தொலைவில் இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இந்நிலையில் இறுதிப்பட்–்டியலாக 765 வாக்குச்சாவடிகள் இடம் பெற்றிருப்பது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு வார்டில் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் வாக்குச்சாவடி மையங்கள் இடம் பெற்றிருக்கக்கூடிய பகுதிகள் குறித்து பட்டியலை பார்த்து அறிந்து வருகின்றனர்.

Tags : centers ,elections ,Tiruchirapalli ,
× RELATED இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு தாமதம்