×

அந்தோணியார் ஆலய தேர்பவனி

பட்டுக்கோட்டை, மே 15: பட்டுக்கோட்டை அந்தோணியார் கோவில் தெருவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித அந்தோணியார் மற்றும் புனிதர்களின் திருவுருவ சொரூபங்கள் பவனியாக வந்தது. புனித அந்தோணியார் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ரயில் நிலைய ரோடு, பேருந்து நிலையம்,  பழனியப்பன்தெரு, மணிக்கூண்டு, சின்னையா தெரு, மைனர் பங்களா, மயில்பாளையம், முத்துப்பேட்டைரோடு கைகாட்டி வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

Tags : Anthonier ,Derpavani ,
× RELATED கரூர் பசுபதீஸ்வரர் கோயில்