×

பட்டுக்கோட்டையில் 4 பள்ளி வாகனங்களில் குறைபாடு தகுதி சான்று தற்காலிகமாக நீக்கம் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி

பட்டுக்கோட்டை, மே 15: பட்டுக்கோட்டையில் நடந்த ஆய்வில் 4 பள்ளி வாகனங்களின் குறைபாடு கண்டறிந்து அதற்கான தகுதி சான்று தற்காலிகமாக நீக்கப்பட்டது. பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களை சேர்ந்த 39 தனியார் பள்ளிகளின் 267 வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வை பட்டுக்கோட்டை ஆர்டிஓ பூங்கோதை துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த ஆய்வில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன், பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சின்னையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதைதொடர்ந்து அனைத்து தனியார் பள்ளிகளை சேர்ந்த வேன் டிரைவர்ளுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் விளக்கி கூறினார்.

அப்போது அவர் பேசுகையில், டிரைவர்கள் மனது மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் சீக்கிரம் தூங்கி நேரத்தோடு எழுந்திருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தை மீதும் அக்கறை செலுத்த வேண்டும். அதேபோல் வண்டியில் ஏதாவது ஒரு சின்ன குறை இருந்தாலும் உடனடியாக இன்சார்ஜிடம் சொல்லி சரி செய்ய வேண்டும். இது ஏனோதானோ என்று செய்வது கிடையாது. என்னுடைய எதிர்காலம் என்னுடைய பையனிடம் உள்ளது. ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு மிகவும் சிரமப்பட்டு பணத்தை கட்டி பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். எனவே டிரைவர்கள் சாலை விதிகளை மதித்து ஒரு பள்ளி குழந்தைக்கோ, ஒரு பஸ்சுக்கோ எந்தவிதமான டேமேஜ் ஏற்படாமல் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்க வேண்டும் என்றார்.  ஆய்வின் முடிவில் 4 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டு அந்த 4 வாகனங்களின் தகுதி சான்றை தற்காலிமாக தகுதி நீக்கம் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் அதிரடியாக நடவடிக்கை எடுத்தார்.

Tags : Pattukottai ,
× RELATED பட்டுக்கோட்டையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி