×

வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்த இயந்திரங்கள் பறிமுதல்

திருக்காட்டுப்பள்ளி, மே 15: பூதலூர் அருகே வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்த இயந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.  பூதலூர் அடுத்த சித்தாயல் வெண்ணாற்றில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதுகுறித்து திருவையாறு டிஎஸ்பி பெரியண்ணன், பூதலூர் போலீசாருக்கு கடுமையான எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை வெண்ணாற்றில் நிறுத்தி வைத்திருந்த இயந்திரங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நேற்று (14ம் தேதி) காலை சப்இன்ஸ்பெக்டர் (பொ) அருண்ராஜ், தலைமை காவலர்கள் வாசு, விஜயகுமார் ஆகியோர் அப்பகுதிக்கு சென்றனர். ஆனால் இரவு நேரத்தில் மணல் ஏற்றி லாரிகள் சென்றுவிட்டன. அப்பகுதி மக்கள் முற்றுகையிட்ட இயந்திரங்களை மட்டும் போலீசார் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிந்து மணல் கடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : sandy ,
× RELATED மதுபானம் பறிமுதல்