×

ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள்

ராசிபுரம், மே 15: ராசிபுரம் வாரச்சந்தையில் சாலையை வியாபாரிகள் ஆக்கிரமிப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டு பகுதியில் செவ்வாய்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இங்கு, வாரச்சந்தைக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து வியாபாரிகள் சாலையோரங்களை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். நாளுக்குநாள் பஸ் ஸ்டாண்டு முகப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களது டூவீலர்களை சாலையையொட்டி நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனால், பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் நுழைய முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று பஸ் ஸ்டாண்டின் முகப்பை வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆக்கிரமித்து இருந்ததால், அரசு பஸ் உள்ளே செல்ல முடியாமல் சாலையில் நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அரசு பஸ் டிரைவருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, நகராட்சி அதிகாரிகள் வாரச்சந்தையை கண்காணித்து பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Merchants ,bus stand ,Rasipuram ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை