×

உரம்பு பகுதியில் வெயிலால் காய்ந்து கருகிய முட்டைகோஸ்

நாமகிரிப்பேட்டை, மே 15: நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கத்தரி வெயிலின் தாக்கத்தால் முட்டைகோஸ் செடியிலேயே கருகி வருகிறது.
நாமகிரிப்பேட்டை பகுதியை அடுத்த கோரையாறு, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, ராஜபாளையம், பிலிபாக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது.  

இப்பகுதியை சுற்றிலும் மலைகள், குட்டைகள், ஏரிகள் அதிகமாக இருப்பதால் ஈரப்பதமும், குளர்ச்சியும் நிரம்பி காணப்படுவதால் இப்பகுதிகளில் முட்டைகோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். 5 மாத குறுகிய பயிரான முட்டைகோஸ் அறுவடைக்கு தயாரான நிலையில், தற்போது கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தில் முட்டைகோஸ் செடிகள் கருகியது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் எற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கரில் முட்டைகோஸ் பயிரிட ₹25 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது, கிலோ ₹30 வரை விலை போவதால் விவசாயிகளுக்கு சற்று லாபம் கிடைத்து வந்தது. ஆனால், கடுமையான கத்தரி வெயிலின் தாக்கத்தில் முட்டைகோஸ் செடிகள் முழுவதும் காய்ந்து கருகி வருவதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் முட்டைகோஸ் பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : area ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி