×

போச்சம்பள்ளி பகுதியில் நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

போச்சம்பள்ளி மே 15: போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை பொய்த்து போனதால் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. வரலாறு காணாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டு பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தென்னை, மா மரங்கள் காய்ந்து வருகிறது. தண்ணீரை விலை கொடுத்து வாங்கி காய்ந்த மரங்களுக்கு ஊற்றி விவசாயிகள் அதனை காப்பாற்றி வருகின்றனர்.

இதை பயன்படுத்தி சிலர் இப்பகுதியில் தண்ணீர் உள்ள நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீரை டிராக்டர் மூலம் எடுத்து சென்று ₹500 முதல் ₹600வரை விற்பனை செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை உறிஞ்சி விற்பனை செய்யப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. தண்ணீரை உறிஞ்சுவதால் வருங்காலங்களில் தண்ணீருக்கு மேலும் கஷ்டபடும் நிலை உருவாகும். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Pochampalli ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...