×

செம்மண்ணால் செய்யப்பட்டு விதவிதமான வடிவங்களில் விற்பனைக்கு வந்த குடுவைகள் கோடை வெயிலை சமாளிக்க ஆர்வமுடன் வாங்குகின்றனர்

புதுக்கோட்டை, மே 15: புதுக்கோட்டையில் கோடை வெயிலை சமாளிக்க பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்த செம்மண் குடுவைகளை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். தமிழகமெங்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.  குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களிலும் 100 டிகிரிக்கு குறைவின்றி வெப்பம்  அதிகரித்துள்ளதால் அனல் காற்று வீசி வருகிறது. இதனை சமாளிக்க இளநீர், நுங்கு, மோர், சர்பத் மற்றும் தர்பூசணி, முலாம்பழம் ஆகியவற்றின் பழச்சாறுகள் போன்றவற்றை வாங்கிப் பருகி சூட்டை தணித்து வருகின்றனர்.  நாகரீக மோகத்தால் பலர் ரசாயன குளிர்பானங்களையும் வாங்கிப் பருகி வருகின்றனர்.


பொதுவாக வீடுகளில் அலுவலகங்களில் சில்வர், பித்தளை பாத்திரங்களில், பிளாஸ்டிக் குடங்களில் சேமித்து வைக்கப்படும் குடிநீர், சுற்றியுள்ள சூழ்நிலைக்கு ஏற்றபடி வெப்பமடைந்து விடுவதால் அதனைத் தவிர்த்து வரும் நிலையில், தற் போது பெரும்பாலான கிராமப்புற பகுதிகளில் மட்டுமன்றி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போது வெப்பத்தின் சூட்டைத் தணிக்க குளிர்ச்சியான நீரை பருகவிரும்பும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள் அனைவரும் மண்பானையில் நிரப்பப்பட்டுள்ள நீரை பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனையொட்டி தண்ணீர் சேமித்து வைக்கும் படியான மண்பாண்டங்கள் கிராமப்புறங்களில் தயாரிக்கப்பட்டு நகர் புறங்களுக்கு கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதில்  நாகரிக மோகத்தால் சிக்குண்ட பலரும் மண் பானைகளை வாங்கி வைக்கக் கூச்சப்படும் பட்சத்தில் அவர்க ளுக்கு ஏற்றபடி சிறுசிறு செம்மண் குடுவைகள் நவீன வடிவங்களில்  தயாரிக்க ப்பட்டு விற்பனைக்காக கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளன. இவைகளில் நிரப்பி வைத்துப் பருகுகின்றக் குடிநீரும் குளிர்ச்சியாக உள்ளதால், சிறு சிறு மண் குடுவைகளுக்குத் தற்போது வரவேற்பு எழுந்துள்ளது. ஏறக்குறைய பீங்கான் வடிவில் தயாரித்து விற்கப்படும் செம்மண் குடுவைகள் குறைந்தபட்சம் 25 முதல் அதிகப் பட்சமாக ரூ 400வரைக்கும்  இந்த மண் கொடுமைகள் விற்கப்படுகிறது. இவற்றை வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றபடி பொதுமக்கள் அலுவலர்கள் வாங்கிச் செல்கின்றனர்.

Tags :
× RELATED உரிய நேரத்தில் தரமான உரம் கிடைக்கும்...