×

பர்கூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பகுதி நேர பி.இ., பி.டெக் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, மே 15: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில், பகுதி நேர பி.இ., பி.டெக் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பர்கூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி உட்பட நமது மாநிலத்தில் செயல்பட்டு வரும் 6 அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் 3 அரசு உதவிபெறும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., பி.டெக்., பட்டப்படிப்பிற்கு கடந்த 6 முதல் இணையத்தில் விண்ணப்பப் பதிவேற்றம் நடந்து வருகிறது.

இக்கல்லூரியில் பகுதி நேர பி.இ., மின்னியல் மற்றும் மின்னனுவியல் படிப்பு 40 மாணவர்களுடன் கடந்த 2002ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப்படிப்பில் சேர பட்டய இன்ஜினியரிங் படிப்புடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.ptbe-tnea.com என்ற இணையத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் வருகிற ஜூன் 4ம் தேதி ஆகும். இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஜூன் மாதம் 7ம் தேதிக்குள் மேற் காணும் இணையத்தில் உள்ள முகவரியில் சென்று சேரும் வகையில் அனுப்ப வேண்டும். இவ்வாறு கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags : B.Tech ,Bargur Government Engineering College ,
× RELATED பி.இ., பி.டெக் படிப்புகான துணை கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு