×

நாச்சியார் அம்மன் கோயிலில் ஜூலையில் பூசை படைப்பு விழா ஆலோசனை கூட்டத்தில் முடிவு

திருமயம், மே 15: திருமயம் அருகே  நாச்சியார் அம்மன் கோயில் ஆறாவது குலால  பூசை படைப்பு விழா நடத்துவது பற்றி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஜூலை மாதம் விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தை சேர்ந்த நாச்சியார் அம்மன் கோயில் ஆறாவது பூசை படைப்பு விழா ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழா கமிட்டி தலைவர் மெய்யர் தலைமை வகித்தார். இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ஆறு கரை குலாலர்களின் முக்கிய விழாவான நாச்சியார் அம்மன் பூசை படையல் விழாவானது நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.  இது ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் விழா என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் ஆறாம் ஆண்டு பூசை படையல் விழா வரும்  ஜூலை மாதம் 23ம் தேதி நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும்  விழாவில் சுற்று வட்டார பகுதி ஆறு கரை ஊர்களான இளையாத்தங்குடி, நெய்வாசல், ஆத்தங்குடி, காரையூர், ராஜக்கம்பட்டி, சுண்ணாம்பு ஆகிய தாய் கிராமங்களின் குலாலர்கள் விழா ஏற்பாடுகள் சிறந்தமுறையில் செய்யவேண்டுமென என கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.  இக்கூட்டத்தில் ஆறு கரை நிர்வாகிகள் ராமசாமி, மாணிக்கம், சண்முகம், ராமசாமி, துரைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். கூட்ட முடிவில் கொன்னத்தான்பட்டி கணேசன் நன்றி கூறினார்.

Tags : Nachiyar Amman ,temple ,festival meeting ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்