×

காரிமங்கலம் பகுதியில் தண்ணீரின்றி கருகிய பருத்தி செடிகள்

காரிமங்கலம், மே 15: காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் காய்ந்த பருத்தி செடிகளுக்கு இழப்பீடு வழங்க ேவண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நாகணம்பட்டி, திண்டல், பெரியாம்பட்டி, பைசுஅள்ளி, காளப்பனஅள்ளி, பூமாண்டஅள்ளி, கேத்தனஅள்ளி பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். போதிய அளவு மழை இல்லாததாலும், கிணற்றில் தண்ணீர் வற்றியதால், பருத்தி பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

வசதி படைத்த சில விவசாயிகள், தண்ணீரை டிராக்டர்களில் விலைக்கு வாங்கி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாலான ஏழை விவசாயிகள் பயிரிட்டுள்ள பருத்தி செடிகள், தண்ணீர் இல்லாமல் காய்ந்துபோய் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : cotton plants ,area ,Gulf of Gharmangalam ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...