×

காரிமங்கலம் பகுதியில் தண்ணீரின்றி காய்ந்த கரும்பு

காரிமங்கலம், மே 15: காரிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகளுக்கு போதிய தண்ணீர் இல்லாததால், காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், பெரியாம்பட்டி, தும்பலஅள்ளி, திண்டல், எலுமிச்சினஅள்ளி, கேத்தனஅள்ளி, பொம்மஅள்ளி, பேகாரஅள்ளி, நாகணம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள், கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், பருமழை பொய்த்ததால், தண்ணீரின்றி கரும்புகள் அனைத்தும் காய்ந்த நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  

இதனால் காரிமங்கலம், பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஜெர்த்தலாவ், பெல்ரம்பட்டி, கரகூர், மாரண்டஅள்ளி, சாமனூர், காவப்பட்டி, ரெட்டியூர் புலிக்கரை ஆகிய பகுதிகளில் கரும்பு விவசாயத்தை அடியோடு கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கரும்பு சாகுபடிக்கு விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என விவசாயிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...