×

மக்காச்சோளத்தில் ராணுவ படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் செயல்திட்ட கூட்டம்

தா.பழூர், மே 15: அரியலூர் மாவட்டம் தா.பழூர் வேளாண் அலுவலகத்தில் மக்காச்சோளத்தில் ஏற்படும் ராணுவ படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முன்செயல் திட்ட விளக்க கூட்டம் நடந்தது. தா.பழூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் முகமது பாரூக் தலைமை வகித்தார். கூட்டத்தில் வரப்பு பயிராக தட்டைப்பயிர், எள், உளுந்து உள்ளிட்ட விதைகளை கட்டாயம் வழங்க வேண்டும். மேலும் படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த வேளாண்மை துறை பரிந்துரை செய்யும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டும் விவசாயிகளுக்கு உபயோகம் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி, வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ், வேளாண்மை அலுவலர் சுப்ரமணியன், அரியலூர் விதை ஆய்வாளர் சேகர், வேளாண் அலுவலர் திருசெல்வகுமார், துணை வேளாண்மை அலுவலர் அனந்தராமன், வேளாண் உதவி அலுவலர் சிவக்குமார், அசோக்குமார், ஆனந்த் மற்றும் தா.பழூர் வட்டாரத்தை சேர்ந்த பூச்சி மருந்து மற்றும் விதை விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.
அட்மா திட்ட மேலாளர் சகாதேவன் நன்றி  றினார்.

Tags : Meeting ,Army Armed Forces ,Mecca ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...