×

அனைத்து கட்சி கூட்டங்களுக்கும் திரண்டு வரும் மக்கள் ஓட்டுகளா மாறுமா? அரசியல் கட்சியினர் குழப்பம்

கரூர், மே 15: அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கும் மக்கள்படையெடுப்பதால் ஒட்டுகளாக மாறுமா கட்சியினருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரவக்குறிச்சி சட்டமன்றஇடைத்தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெறுகிறது. 17ம்தேதியுடன்பிரசாரம் முடிவடைகிறது. பிரசாரத்திற்கு இன்னும் 3நாட்களேஇருப்பதால் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும் பிசியாகிவிட்டனர். ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று கூட்டங்களுக்குஅழைத்து செல்லப்படுகின்றனர். கட்சிதலைவர்கள் கூட்டத்தை பார்த்து மிரண்டு போய்விடுகின்றனர். தலைக்கு ரூ.200 வழங்கப்படுகிறது. கட்சி தலைவர்கள் அவர்கட்சி மாறிவிட்டார், இவர் கட்சி மாறிவிட்டார். கட்சி தனது நிலையை மாற்றிக்கொண்டு சமரசம்செய்து கூட்டணி வைத்துக்கொண்டுவிட்டது என்றெல்லாம் கடுமையாகபேசி வருகின்றனர். எனினும் மக்கள் மாறி மாறி  அனைத்து கட்சி கூட்டத்திற்கும் சென்றுவருகின்றனர்.  கட்சி கூட்டத்திற்கு ஆள்பற்றாக்குறை காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகள், வேன்களில் கொண்டு வந்துஇறக்குமதி செய்யப் படுகின்றனர். கரூர் அருகே நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள்இருப்பதால் பார்டரில் உள்ள கிராமங்களில் இருந்து பிரசாரத்திற்கு ஆட்களை அழைத்து வருகின்றனர். வெளிமாவட்ட கிராம மக்களுக்கு இங்கு ஓட்டு கிடையாது என்பது உள்ளூர் நிர்வாகிகளுக்கு மட்டுமேதெரியும். எனினும்கட்சி தலைவர்களை திருப்திபடுத்துவதற்காக இந்த முறையை கையாண்டு வருகின்றனர்.


வழக்கமாக தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு செல்லும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு வராமல் உள்ளனர். தேர்தல் முடிந்தபின்னர் தான் வேலைக்கு வருவோம் என கூறிவிட்டனர். எனினும் அழைத்து வரப்படும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்பது வாக்கு எண்ணிக்கையின் போது தான் தெரியவரும் அரசியல் கட்சியினர் தெரிவித்தனர். பொதுமக்களிடம் கேட்டபோது, கூட்டத்திற்குபணம், ஓட்டுக்கு பணம்என தருகின்றனர். தருவதை வாங்கிக்கொண்டு விரும்பிய கட்சிக்கே ஓட்டுப்போடுவோம் என்றனர்.

Tags : voters ,party meetings ,parties ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...