×

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் டாஸ்மாக் கடை 4 நாட்கள் மூடல்

கரூர், மே 15: அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்குஎண்ணிக்கை ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடை மூடப்படுவது குறித்து  கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் இடைத்தேர்தல் 2019ஐ முன்னிட்டு மே 17ம்தேதி காலை 10மணி முதல் 19ம்தேதி இரவு 12மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 23ம்தேதி அன்றும் அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் ஓட்டல்கள் (பிஎல்3 உரிமம் பெற்றவர்கள்) ஆகியவற்றில் மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை முடக்கம் செய்யப்படுகிறது. விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003ன்படியும், 1989ன்படியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Aravakurichi ,shop ,
× RELATED அடகு கடையில் கொள்ளை முயற்சி