கரூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவக்கம்

கரூர், மே 15:  கரூர் அரசுகலைக்கல்லூரியில் மாணவர்சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது. கரூர் அரசு கலைக்கல்லூரியின் நடப்பு கல்வியாண்டின் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முறையில் நடைபெறுகிறது. சிறப்பு மாணவர் சேர்க்கை இன்று (15ம்தேதி) நடைபெற உள்ளது. இதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர்படை, விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளலாம். வரும் 17ம்தேதி அன்று தமிழ், ஆங்கில மொழிபாடங்களுக்கும், 20, 21ம்தேதிகளில் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 24ம்தேதி கலை மற்றும் வணிகவியல் பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கட்டாயமாக பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் பிளஸ்1, பிளஸ்2, வகுப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ் (அசல்), சாதிசான்றிதழ் (அசல்), ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு இரண்டுபுகைப்படம், ஆகியவற்றுடன் காலை 9மணிக்கு கல்லூரிக்கு வரவேண்டும்.சான்றிதழ்களின் இரண்டு நகல்களையும் (சான்றொப்பத்துடன்) கொண்டுவர வேண்டும் என கல்லூரி முதல்வர் (பொ) ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Karur Government College ,
× RELATED கரூர் அரசு கல்லூரியில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சேவை மையம்