×

வேலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் மின்னல் வேக வாகனங்களை பிடிக்க போலீசாருக்கு ரேடார் கன் பயிற்சி எஸ்பி உத்தரவு

வேலூர், மே 15: வேலூர் மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் மின்னல் வேக வாகனங்களை பிடிக்க நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு ரேடார் கன் பயிற்சி அளிக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சாலை விபத்துக்கள் நடைபெறும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனை தடுக்க எஸ்பி பிரவேஷ்குமார் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அதிக விபத்துக்கள் நிகழும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள், மின்னும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதிகாலை, இரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் சரக்கு லாரிகள் மற்றும் கன்டெய்னர் வாகனங்கள் மீது பிற வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது. மாவட்ட எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் மின்னல் வேக வாகனங்களை பிடிக்க நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு ரேடார் கன் பயன்படுத்துவது எப்படி? என்று பயிற்சி அளிக்க எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தொழில்நுட்ப பிரிவு போலீசார் உதவியுடன் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு வாலாஜா, பள்ளிகொண்டா உள்ளிட்ட டோல்கேட்களில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags :
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...