×

வேலூரில் பரபரப்பு சிறிய ரக விமானம் கீழே விழுந்ததாக வதந்தி விடிய, விடிய தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்

வேலூர், மே 15: வேலூரில் சிறிய ரக விமானம் கீழே விழுந்ததாக பரவியதால் போலீசார் விடிய, விடிய தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அது வதந்தி என தெரியவந்தது. வேலூர் மாநகரில் சிறிய ரக 2 விமானங்கள் நேற்று முன்தினம் மாலை குறைந்த உயரத்தில் பறந்துகொண்டிருந்தன. இந்நிலையில் இரவு 10 மணியளவில் மீண்டும் குறைந்த உயரத்தில் ஒரு விமானம் பறந்தது. திடீரென அந்த விமானம் வேலூர் ஓல்டு டவுனில் கீழே விழுந்ததாக தகவல் பரவியது. இதனால் தரையில் விழுந்த விமானத்தை பார்க்க ஏராளமான மக்கள் ஓல்டு டவுன் பகுதியில் குவிந்தனர். தகவல் அறிந்த போலீசாரும் தீவிரமாக தேடினர். தொடர்ந்து செங்காநத்தம், சைதாப்பேட்டை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். விடிய, விடிய நடந்த தேடுதல் வேட்டையில் இது வதந்தி என தெரியவந்தது. இது யாரோ பரப்பிய வதந்தி என்று தெரியவந்தது. இதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Vellore ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...