×

தொழிலாளர் துறையில் கடை, நிறுவன உரிமத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

காரைக்கால், மே 15:  காரைக்காலில் இயங்கும் கடை மற்றும் நிறுவன உரிமத்தை, மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் உடனே பதிவு செய்துகொள்ள வேண்டும் என, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் இயங்கும் கடைகள் மற்றும் அவற்றை சார்ந்த அலுவலகங்கள், கிடங்குகள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனை, தனியார் கல்லூரிகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசு சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள், விவசாய பண்ணைகள் உள்ளிட்டவை, புதுச்சேரி கடை மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1964 கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். என புதுச்சேரி தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் தெரிவித்துள்ளார்.


எனவே, இதுவரை காரைக்கால் மாவட்டத்தில் பதிவு செய்யாத கடை மட்டும் நிறுவன உரிமையாளர்கள் காரைக்கால் மதகடி காமராஜர் வளாகத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யப்படவேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் உரிய தொகை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறையாமல் ஊதியம் வழங்குவதை பணிய மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : shop ,labor department ,
× RELATED மது பாட்டில்களை மொத்த விற்பனை...