×

கருப்பண்ண சுவாமி கோயில் திருவிழா

வேதாரண்யம், மே 15: வேதாரண்யம் தாலுக்கா குரவப்புலம் மேலக்காடு பகுதியில் அமைந்துள்ளது  பதினெட்டாம் படி கருப்பண்ண சுவாமி கோயில். இங்கு ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது.  கோயிலில் உள்ள கோவிந்த ராம திலக ஆஞ்சிநேய பஞ்சமா தேவி; விநாயகருக்கு  சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தனர். பின்பு சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.  தொடர்ந்து பிராயசித்த அபிஷேகம் நடைபெற்று மஞ்சள் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் காவடி ஆட்டம் இன்னிசையுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Koppana Swamy Temple Festival ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்