×

திமுக பூத் கமிட்டியை எ.வ.வேலு ஆய்வு

சோமனூர், மே 14: சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக பூத் கமிட்டியை சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.சூலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமி போட்டியிடுகிறார். இந்நிலையில், சூலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட  பகுதிகளான சாமளாபுரம், சோமனூர், கே.ஆர்.மில் ரோடு,  கருமத்தம்பட்டி பகுதிகளில், சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கமிட்டியினரின் செயல்பாடுகளை ஆய்வு செய்தவர், சில ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது, திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான செல்வராஜ், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், பழனிச்சாமி, நாகராஜ் கங்காதரமூர்த்தி, டி.ஆர்.சண்முகசுந்தரம்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,DMK Booth Committee ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...