×

பூத் சிலிப் வினியோகத்தில் பாகுபாடு கிராம உதவி அலுவலரை திமுகவினர் சிறைபிடிப்பு

சூலூர், மே 14: சூலூர் தொகுதிக்கு உட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவி அலுவலர் தங்கவேல் பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவரை அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் பாலு என்ற பாலசுப்ரமணியம், முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஆறுமுகம் ஆகியோர்,  மிரட்டி பூத் சிலிப்பை பெற்றுள்ளனர். மேலும், திமுகவினரின் பூத் சிலிப்களை வழங்காமல், அதிமுகவினரின் பூத் சிலிப்களை மட்டுமே வழங்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த, அப்பகுதி திமுக தேர்தல் பொறுப்பாளரும்,  மடத்துக்குளம்  சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், அறிவரசு, குறிச்சி பிரபாகரன் உள்ளிட்ட திமுகவினரும், பொதுமக்களும் தங்கவேலை சிறைபிடித்து, தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.  இந்நிலையில், அதிமுகவினர் அப்பகுதியில் கூடி  கிராம நிர்வாக உதவி அலுவலரை வெளியே விடுமாறு கோஷமிட்டனர்.  இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த  டிஎஸ்பி பாஸ்கரன் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார். திமுகவினர்,  கிராம நிர்வாக உதவி அலுவலரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Prakash Prasad ,Boat Chilip ,village assistant officer ,
× RELATED தேனியில் நடந்தது மறு வாக்குப்பதிவு...