×

100 சதவீத தேர்ச்சி பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

கருங்கல், மே 14 :  கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் டாக்டர் தங்க சுவாமி தலைமை வகித்தார். தாளாளர், முதல்வர் முன்னிலை வகித்தனர். ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர் டேனியல் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு பேசினார். இவ்விழாவில் ஸ்காட் கிறிஸ்தவ பள்ளி முன்னாள் தாளாளர் டேனியல் புரூடின் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளியின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கும், பாட வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பாக சிறப்பு விருந்தினர் தங்க மோதிரம் மற்றும் கேடயம் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து ஆசிரியர்களும், மாணவர்களும் செய்திருந்தார்கள்.

Tags : CBSE school students ,
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி