விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வு

கன்னியாகுமரி, மே 14 : அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்வி கழகத்திற்கு உட்பட்ட விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு படிப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியில் வளாகத் தேர்வு நடந்தது. எம்.என்.சி, எல்.அன்.டி., டி.வி.எஸ் குரூப் ஆப் கம்பெனி, செயின்ட் கோபியென், போர்க் வார்னர் உட்பட தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள கம்பனிகளைச் சேர்ந்தவர்கள் இந்த வளாகத்தேர்வை நடத்தினர். இதில் 178 மாணவ-மாணவிகள் பல்வேறு கம்பெனிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. விவேகானந்தா கல்வி கழக தலைவர் துரைசாமி, செயலாளர் ராஜன், பொருளாளர் கணேசன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.  நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராம்குமார், வேலைவாய்ப்பு அலுவலர் பாலன், கல்லூரி நிர்வாக அலுவலர் முத்துக்குமார் உட்பட ஆசிரிய ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Campus ,Vivekananda Polytechnic College ,
× RELATED குழந்தைகளை அழைக்க வரும்...