×

வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளியை போராடி மீட்ட பொதுமக்கள்

குலசேகரம், மே 14 : கோதையாறு அணைகளில் இருந்து கோதையாறு நீர் மின் நிலையங்கள் 1 மற்றும் 2 இயங்குவதற்காக திறக்கப்படும் தண்ணீர் பின்னர் பேச்சிப்பாறை அணைக்கு வந்து சேர்கிறது. நேற்று முன்தினம் கோதையாறு நீர்மின் நிலையம் 1ல் இரவு 8 மணியளவில் மின் உற்பத்திக்கு பின் வெளியேறும் தண்ணீர் பேச்சிப்பாறை அணைக்கு திறந்து விட்டனர்.

தண்ணீர் திறப்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இந்த தண்ணீர் மோதிரமலை - குற்றியாறு இடையிலான தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்றது. இதனால் மக்கள் அங்கும் இங்கும் செல்ல முடியாத அளவுக்கு சாலை துண்டிக்கப்பட்டது. வெளியூர் சென்றுவிட்டு இரவு குற்றியாறு திரும்பியவர்கள் இந்த தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் குளச்சலில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் குற்றியாறு பகுதியை சேர்ந்த ஷிபு(36) என்பவர் இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். தரைப்பாலம் பகுதியில் வரும்போது இருளாக இருந்ததால் தண்ணீரின் அளவு தெரியாமல் பைக்கில் வேகமாக சென்றார். அப்போது பைக் தண்ணீரில் சிக்கி அடித்து செல்லப்பட்டது. அதோடு ஷிபுவையும் தண்ணீர் இழுத்து சென்றது.

அவருக்கு நீச்சல் தெரிந்ததால் தண்ணீரில் மிதந்தபடி செடி கொடிகளை பிடித்து ஒரு பாறையில் ஏறி அமர்ந்துக்கொண்டார். இருளில் இருந்த அவர் அங்கிருந்தவாறு உதவி கேட்டு சத்தம் போட்டார். அப்போது பாலத்தின் மறு பக்கம் நின்றவர்கள் அவரது சத்தம் கேட்டு டார்ச் லைட்டை அடித்து பார்த்த போது தண்ணீருக்கு மத்தியில் பாறையில் ஷிபு இருப்பது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களை அழைத்து வந்து கயிறு கட்டி சுமார் 1 மணி நேரம் போராடி ஷிபுவை மீட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அணையில் தண்ணீர் திறக்கும்ேபாது முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். இல்ைலயென்றால் பகல் வேளையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : civilians ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை