எஸ்எஸ்எல்சி சிறப்பு துணைத்தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்க கடைசி நாள்

நாகர்கோவில், மே 14: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நேற்று (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இன்று (14ம் தேதி) (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.

நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இந்த மறுவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இந்த நாட்களில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்காக அரசுத் தேர்வுகள் சேவை மையம், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கட்டணம் ₹675 செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுள் பதிவிறக்கம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related Stories: