×

ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

விழுப்புரம், மே. 14:  குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு அலமேலுபுரம் அசோக்நகர் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில்இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மனு அளிக்குமாறு கூறினார். அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் ஆட்சி
யர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:இப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு அடித்தளம் போடப்பட்டது. இதன் மூலம் கதிர்வீச்சு வெளியேறி பொதுமக்களுக்கு பலவிதங்களில் தீமை ஏற்படும். எனவே இந்த செல்போன் டவரை குடியிருப்பு பகுதியில் அமைக்க வேண்டாம் என்று முதலில் நாங்கள் கூறினோம்.

இது ெதாடர்பாக மேற்கு காவல்நிலையத்திலும் புகார் அளித்தோம். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சில நாட்களில் மீண்டும் டவர் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. எனவே ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் நலன் கருதி குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க தடை விதித்து, வேறு இடத்தில் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Tags : Public Siege ,Collectorate Office ,
× RELATED நான் முதல்வன் நிரல் திருவிழா