×

சுசீந்திரம் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

சுசீந்திரம், மே 14: சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 2ம் நாள் காலை பூங்கோயில் வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா வரும் நிகழ்ச்சி, இரவு புஷ்பகவிமான வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

3ம் நாள் சுவாமியும் அம்பாளும் புஷ்பக வாகனத்தில் வீதியுலா, இரவு சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்ஷ வாகனத்தில் வீதியுலா நடந்தது. 4ம் திருவிழாவான 8ம் தேதி பூத வாகனத்தில் சுவாமி வீதியுலா வரும் காட்சி, இரவு பரங்கி நாற்காலி வாகனத்தில் வீதியுலா நடந்தது. 5ம் நாளான 9ம் தேதி ரிஷப வாகனத்தில் வீதியுலா, மாலை ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு அஷ்டாபிஷேகம், இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடந்தது.

10ம் தேதி காலை பூங்கோயில் வாகனத்தில் வீதியுலா, இரவு இந்திர வாகனத்தில் வீதியுலா வரும் காட்சியும் நடந்தது. 11ம் தேதி காலை பல்லக்கில் சுவாமி வீதியுலா, மாலை நடராஜமூர்த்திக்கு திருச்சாந்து உற்சவம், இரவு கைலாசபர்வத வாகனத்தில் சுவாமி வீதியுலா வரும் காட்சியும் நடந்தது.
12ம் ேததி காலை சிதம்பரேஸ்வரர் வீதியுலா வருதல், அலங்கார மண்டபத்தில் நடராஜபெருமானுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் அஷ்டாபிஷேகம் நடந்தது. இரவு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் திருவீதியுலா வரும் காட்சியும் நடந்தது.

9ம் திருவிழாவான நேற்று காலை 10 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சுவாமியும் அம்பாளும் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது. மாலை 6 மணிக்கு சுவாமி தந்தம் பல்லக்கில் மண்டகபடிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி, இரவு 10 மணிக்கு மேளதாளம் முழங்க சப்தாவர்ண காட்சியும் நடந்தது.

10ம் நாள் விழாவான இன்று இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் பெருமாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைத்து தெப்பகுளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் தெப்ப திருவிழா நடக்கிறது. இரவு 12 மணியளவில் திருஆறாட்டு நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ேகாயில்களின் இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மேலாளர் சண்முகம்பிள்ளை, தாணுமாலயசுவாமி பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்துள்ளனர்.

Tags : festival festival ,
× RELATED அந்தியூர் குருநாதசாமி கோயில் ஆடி தேர்...