×

பண்ருட்டி மேம்பாலத்தில் சர்வீஸ் சாலை அமைப்பதில் குளறுபடி

பண்ருட்டி, மே 14: பண்ருட்டி- சென்னை சாலையில் மத்திய ரயில்வேதுறை மற்றும் மாநில அரசு இணைந்து ரயில்வே மேம்பாலம் கட்டி முடித்தது. ஆனால் இதன் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைப்பதில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. அனுமதித்த அளவினைவிட குறைவாகவே சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. நான்குமுனை சந்திப்பிலிருந்து பாலம் முடியும் வரை உள்ள பகுதிகளின் முக்கிய இடங்களில் படிக்கட்டுகள் கட்ட வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான எந்த ஆயத்த பணிகளும் செய்யப்படவில்லை. சர்வீஸ் சாலையில் மிக மிக குறைந்த இடத்திற்குள்ளேயே கழிவுநீர் வாய்க்கால் மின்கம்பங்கள் அமைத்து வருகின்றனர்.

சர்வீஸ் சாலையை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட பாலம் கட்டும் நெடுஞ்சாலைத்துறையினர் போதிய அளவில் இடங்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது ரயில்வே கேட்டும் மூடப்பட உள்ளதால் எதற்கும் பயன்படாத சாலையாக உள்ளது. குறைந்தபட்சம் 15 அடியாவது சர்வீஸ் சாலை அமைத்தால்தான் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்றுவர முடியும். எனவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் சம்பந்தப்பட்ட சர்வீஸ் சாலை அமைந்துள்ள இடத்தில் உள்ளவர்களை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தி தீர்வு செய்தால் மட்டுமே இப்பகுதியில் போதிய அளவில் சாலை அமைய தீர்வு கிடைக்கும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Panruti ,
× RELATED காங்கிரஸ் வேட்பாளர் காரில் சோதனை