×

கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும்

நெய்வேலி, மே 14: நெய்வேலி அருகே உள்ள இருப்பு ஊராட்சியை சுற்றி வடக்கிருப்பு, தெற்கிருப்பு, கிழக்கிருப்பு, நாச்சி வெள்ளையான்குப்பம், நண்டுகுழி உள்பட 30க்கும் மேற்பட்ட  கிராமங்கள் உள்ளன.  இங்குள்ள கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இதனால் இருப்பு கிராமத்தில் அரசு கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டது. இங்கு புதிதாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும், மருத்துவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே கிராமத்திற்கு வருவதாக கூறப்படுகிறது. சில நேரங்களில் விவசாயிகளை  கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது மக்கள் மருத்துவர் இல்லாமல் ஏமாற்றத்துடன் கிராமங்களுக்கு திரும்பிச் செல்வதாக கூறப்படுகிறது. இதனால் விவசாய கிராம மக்கள் தங்கள் கால்நடைகளை வளர்ப்பதில் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிரந்தர மருத்துவர்  நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : doctor ,clinic ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...