×

தனியார் மண்டபத்தின் கழிவுநீர் தெருவுக்குள் வர எதிர்ப்பு விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை

விருத்தாசலம், மே 14: விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட தீர்த்த மண்டபதெருவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் அருகில் உள்ள வடக்குகோபுர வாசலில், தனியார் திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தீர்த்தமண்டபத்தெருவில் உள்ள சிமெண்ட் சாலையை கடந்து மணிமுக்தா ஆற்றுக்கு கொண்டு செல்ல நகராட்சி நடவடிக்கை எடுத்து வந்தது. இதனால் அங்கு உள்ள சிமெண்ட் சாலையில் பள்ளம் தோண்டி கழிவுநீர் செல்ல ஏற்பாடுகளை நேற்று நகராட்சியினர் செய்தனர்.

 இதை அறிந்த அப்பகுதி மக்கள் அப்பணியை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்கனவே தங்கள் பகுதியில் வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறோம். இந்நிலையில் தனியார் மண்டபத்தின் கழிவுநீர் இப்பகுதி தெரு வழியாக செல்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதற்கு நகராட்சியில் திருமண மண்டபத்தினர் அனுமதி பெற்ற பின்னர்தான் இப்பணி மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நகராட்சி ஆணையர் பாலு இது சம்பந்தமாக மனு கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட மக்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துவிட்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags : siege ,office ,anti-Vriddhachalam ,hall ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்