×

எட்டயபுரம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

எட்டயபுரம், மே 14: தூத்துக்குடி கலக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவின் பேரிலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் ஆலோசனையின் பேரிலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் தலைமையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் எட்டயபுரம் தாலுகா தாப்பாத்தி அகதிகள் முகாமில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறியும் பணி நடந்தது. கண்டறியப்படும் பள்ளிசெல்லா குழந்தைகளின் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்க்கப் படுவார்கள் என வட்டார வள மைய மேற்பார்வையாளர் லட்சுமி தெரிவித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஜேம்ஸ், சைல்டு லைன் அலுவலர் நதியா, ஆசிரியர் பயிற்றுநர்கள் விஜயலட்சுமி, மணிகண்டன், ஜீனத்பேகம், சிவசங்கரி, அனிதா, அஸ்வினி, சிறப்பு ஆசிரியர்கள் சுதா, ஆரோக்கியராஜ் பங்கேற்றனர்.

Tags : school ,children ,area ,Ettayapuram ,
× RELATED பள்ளி செல்லா குழந்தைகள் 18 பேர் கண்டறியப்பட்டனர் கல்வியை தொடர ஏற்பாடு