×

உடன்குடி அருகே பெரியபுரம் கோயிலில் திருவிளக்கு பூஜை

உடன்குடி,மே 14:  உடன்குடி அருகே பெரியபுரம்  பிரம்மசக்தி அம்மன் கோயிலில்  வருஷாபிஷேக விழா நடந்தது. பெரியபுரம் பிரம்மசக்தி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா  காலை 7மணிக்கு மங்கள இசையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. காலை 7.30மணிக்கு தேவதாஅனுக்ஞை, கும்பஆவாஹனதி பூஜை, கணபதி ஹோமம்,துர்கா ஹோமம், மூலமந்த்ர ஹோமம், பூர்ணாகுதி, சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம், பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து காலை 8.15மணிக்கு யாகசாலையில் இருந்து கும்பம் எடுத்துச் சென்று காலை 8.30மணிக்கு கோயில் கோபுரங்களுக்கு விமான அபிஷேகமும், காலை 9மணிக்கு மூலமூர்த்திக்கு பல வகை திரவியங்களால் மகா அபிஷேகமும், கும்பாபிஷேகமும் தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு  பிரசாதம் வழங்கப்பட்டது. நண்பகல் 12மணிக்கு விசேஷ சந்தன அலங்கார தீபாராதனையும், பகல் 1மணிக்கு அன்னதானமும், மாலை 5மணிக்கு 2007பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 9மணிக்கு அலங்காரபூஜை நடந்தது. விழா  ஏற்பாடுகளை பெரியபுரம் கார்த்தீசன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Thiruvilaku Pooja ,Periyapuram temple ,Udangudi ,
× RELATED பைக்கில் வீலிங் சாகசம்: 2 வாலிபர்கள் பரிதாப பலி