×

ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரேமலதா இன்று பிரசாரம்

ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரேமலதா இன்று பிரசாரம் செய்கிறார். ஜி.கே.வாசன் நாளையும், நடிகர் சரத்குமார் 16ம் தேதியும் பிரசாரம் செய்ய உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான கடம்பூர் ராஜூ கூறியிருப்பதாவது: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர். அதன்படி, இன்று (செவ்வாய்) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி பாரதி நகரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு ஓட்டப்பிடாரம், 6.30 மணிக்கு ஒட்டநத்தம், இரவு 7 மணிக்கு ஓணமாக்குளத்தில் பிரசாரம் செய்கிறார்.

 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன், நாளை (15ம் தேதி) இரவு 7 மணிக்கு தாளமுத்துநகர், 8.30 மணிக்கு புதியம்புத்தூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் மே 16ம் தேதி மாலை 5 மணிக்கு தருவைக்குளத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து 5.45 மணிக்கு சிலுவைப்பட்டி, இரவு 7 மணிக்கு கூட்டாம்புளி, 7.35 மணிக்கு குலையன்கரிசல், 8 மணிக்கு சேர்வைக்காரன்மடம், 8.30 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சியின் தெற்கு பகுதிகளிலும் வாக்கு சேகரிக்கிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ottapidaram ,constituency ,
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்