×

தெய்வநாயகப்பேரியில் கன்வென்ஷன் கூட்டம்

நெல்லை, மே 14:  தெய்வநாயகப்பேரியில் வருடாந்திர கன்வென்ஷன் கூட்டம் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். தெய்வநாயகப்பேரியில் செயல்படும் ஐபிசி ஜெப வீட்டில் கன்வென்ஷன் கூட்டம் நேற்று (13ம் தேதி) மாலை 6.30 மணிக்கு துவங்கியது. இதில் நாகர்கோவில் ஜேஎஸ்சி சபையைச் சேர்ந்த பாஸ்டர் இயேசுதாசன் சிறப்பு செய்தி அளித்தார். இதே போல்  தொடர்ந்து இன்றும், நாளையும் (14, 15 தேதிகளில்) மாலை 6.30 மணிக்கு நடைபெறும் கன்வென்சன் கூட்டங்களில் பாடல் ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பு செய்தி வழங்குகிறார்.
ஏற்பாடுகளை பாஸ்டர்  ஜெயக்குமார் தலைமையில் ஐபிசி ஜெபவீடு சபையார் செய்துள்ளனர்.

Tags : Convention meeting ,Deenwani ,
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது