×

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழாவில் சுவாமி வீதியுலா

களக்காடு, மே 14:    களக்காட்டில் உள்ள கி.பி. 11ம் நூற்றாண்டை சேர்ந்த சத்தியவாகீஸ்வரர்- கோமதி அம்பாள் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை இரவு பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது.

3ம் நாள் இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும், 4ம் நாள் இரவில் சுவாமி, அம்பாள் தனித்தனி ரிஷப வாகனங்களிலும் வீதியுலா வந்தனர். 8ம் திருநாளான வரும் 16ம் தேதி நாடார் சமூக மண்டகப்படி சார்பில் காலை 10 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடும், நண்பகல் 12 மனிக்கு அன்னதானமும். பிற்பகல் 2 மணிக்கு நடராஜருக்கு பச்சை சாத்தி சிறப்பு வழிபாடும், அதைத்தொடர்ந்து வீதியுலாவும் நடக்கிறது.

இரவு கங்காளநாதர், சந்திரசேகர் தனித்தனி வாகனங்களிலும், சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் பூங்கோயில், கிளி வாகனங்களிலும் வீதியுலா நடைபெறும்.  வரும் 17ம் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் (18ம் தேதி) தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள் மற்றும் மண்டப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Swami Veedhiula ,festival ,
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...