×

அதிகாரிகள் நடத்திய ஆய்வில் குறைபாடு அம்பலம் அம்பையில் 5 தனியார் பள்ளி வாகனங்களின் அனுமதி ரத்து

அம்பை, மே 14: அம்பையில் சப் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் தலைமையில் நடத்திய ஆய்வில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 5 தனியார் பள்ளி வாகனங்களின் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளின் வாகனங்களை உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் அம்பை ஆசிரியர் காலனி மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ளும் பணி நேற்று நடந்தது. சேரன்மகாதேவி சப்- கலெக்டர் ஆகாஷ், தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி. அம்பை வட்டார போக்குவரத்து பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன், தாசில்தார் வெங்கடேஷ், எஸ்ஐ அருளப்பன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

இதையொட்டி அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பூதத்தான்குடியிருப்பு, முக்கூடல்,  விகேபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் 35 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 70 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டன. இவற்றை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு கொண்டுவரபடுத்தப்படாத பள்ளி வாகனங்களை ஜூன் 1ம் தேதி பள்ளி திறக்கும்முன்பாக  ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்திய  சப்-கலெக்டர் ஆகாஷ்  வாகன  ஓட்டிகளுக்கு மேலும் பல அறிவுரைகள் வழங்கினார்.

இதே போல் மோட்டார்  வட்டார அலுவலர்கள்  கருப்பசாமி, கண்ணன் உள்ளிட்டோர்  தனியார் பள்ளி வாகனங்களை பார்வையிட்டதோடு தீயணைப்பு  கருவிகள்  முதலுதவி பெட்டிகள், குழந்தைகள்  உடமைகளை  வைக்கும் இடம், வேன் டிரைவர்க்கான தனி கேபின் வசதி உள்ளிட்டவை முழுமையாக செய்யப்பட்டுள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஒரு வாகனத்தில் பழுதடைந்து காணப்பட்ட  தீயணைப்பு  கருவியை  மாற்ற  உத்தரவிடப்பட்டது.  இதேபோல் மற்றொரு வாகனத்தின் முதலுதவி  பெட்டியில் மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததை சுட்டிக்காட்டப்பட்டது.

ஆய்வில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 5 வாகனங்களை ஒரு வாரத்திற்குள் சரிசெய்து மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதோடு அதுவரை தற்காலிகமாக அனுமதி ரத்து செய்யப்பட்டது. மறு ஆய்வுக்கு உட்படுத்த தவறினால் முற்றிலும் அனுமதி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.
மேலும் பள்ளி நிர்வாகம் அல்லாது தனிப்பட்ட முறையில் இயங்கும் ஆட்டோக்கள் மற்றும் வேன்களில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு போக்குவரத்து சுற்றறிக்கை விதி எண். 32/2012 மற்றும் பள்ளி வாகன ஆய்வு அரசாணை எண் 643ன் படி வாகனங்களுக்குத் தனியாக கண்டிப்பாக சிறப்பு அனுமதி பெற்று எண்டாஸ்மெண்ட் சான்றிதழ் பெறப்பட வேண்டும். மாறாக இயங்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது. ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அம்பை பகுதி அலுவலர்கள்,  எஸ்ஐ குமார் உள்ளிட்ட போலீசார், வாகன ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Dismissal ,Ambal Amb ,
× RELATED ஸ்பாவில் பெண்ணிடம் சில்மிஷம்...